Monday, November 14, 2011

பரந்தன் சந்தியில் வைத்து தனியார் பேருந்தில் பயணித்த பொதுமக்கள் வாகன சாரதி நடத்துனர் தாக்கப்பட்டு உள்ளனர்!

Monday, November 14, 2011
முல்லைத்தீவிலிருந்து யாழ் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தில் பயணித்து கொண்டிருந்த பொதுமக்கள் மற்றும் வாகன சாரதி நடத்துனர் ஆகியோர் படையினரால் பரந்தன் சந்தியில் வைத்து இன்று தாக்கப்பட்ட சம்பவம் கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறானவற்றை தொடர்ந்தும் பார்த்துக் கொண்டிருக்க முடியாதென தெரிவித்த முல்லைத்தீவு தனியார் சிற்றூர்தி சங்க தலைவர் மு.கனகரத்தினம் இதை கண்டித்து சேவை புறக்கணிப்பினில் ஈடுபடவேண்டி வரலாமெனவும் எச்சரித்துள்ளார். இவர் தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பின் முன்னான் நாடாளுமன்ற உறுப்பினருமாவார்..

இன்று காலை யாழ்ப்பாணத்திலிருந்து மாத்தளான் நோக்கி சென்று கொண்டிருந்த சிங்கள சுற்றுலாப் பயணிகள் பேருந்தொன்றும் முல்லைத்தீவிலிருந்து யாழ்.நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தொன்றும் பரந்தன் சந்தியினில் சிறு விபத்துக்குள்ளானது. எனினும் உயிர் சேதங்களோ உடமைகளுக்கோ சேதங்கள் ஏதும் ஏற்பட்டிருக்கவில்லை. எனினும் விபத்தையடுத்து வாகனத்திலிருந்து குதித்த சிங்கள சாரதி முல்லைத்தீவிலிருந்து யாழ்.நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தின் சாரதியை தாக்கியுள்ளார். இதனால் சீற்றமடைந்த உள்ளுர் பயணிகள் வாகனத்திலிருந்து இறங்கி வந்து வாதிட்டுள்ளனர்.
உள்ளுர் மக்களது சீற்றத்தையடுத்து சிங்கள சுற்றுலாப் பயணிகள் அப்பகுதி படைமுகாம் அதிகாரிக்கு தகவல் வழங்கியுள்ளனர். இதையடுத்து அங்கு சென்று குவிந்த முப்பதிற்குமதிகமான படையினர் சகட்டு பொதுமக்களை தாக்கத்தொடங்கியுள்ளனர். தாம் தாக்கப்பட்டதாக பொதுமக்கள் கூறினர்.

இத்தாக்குதல் பற்றி கருத்து வெளியிட்ட முல்லைத்தீவு தனியார் சிற்றூர்தி சங்க தலைவர் மு.கனகரத்தினம் இவ்விடயம் தொடர்பினில் அரச அதிபருடன் தொடர்பு கொண்டிருப்பதாகவும் இவ்வாறானவற்றை தொடர்ந்தும் பார்த்துக் கொண்டிருக்க முடியாதெனவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment