Monday, November 14, 2011

17ம் தேதி பிற்பகல் பிரசவம்? மும்பை மருத்துவமனையில் ஐஸ்வர்யா ராய் அட்மிட்!

Monday, November 14, 2011
மும்பை: பிரபல இந்தி நடிகையான ஐஸ்வர்யாராய், பிரசவத்துக்காக மும்பை அந்தேரியில் உள்ள செவன் ஹில்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
நிறைமாத கர்ப்பிணியாக உள்ள ஐஸ்வர்யா ராய்க்கு எப்போது குழந்தை பிறக்கும்? என்ன குழந்தை பிறக்கும்? என்ற எதிர்பார்ப்பும், ஆர்வமும் நாடெங்கும் உள்ள ரசிகர்களிடம் நிலவுகிறது.

மேலும், அவரது மைத்துனி உட்பட அமிதாப்பச்சன் குடும்பத்தினர் அனைவரும் அவருக்கு துணையாக அந்த மருத்துவ மனையின் மாடியில் உள்ள எல்லா அறைகளையும் முன்பதிவு செய்து தங்கியுள்ளனர். மேலும், அவருக்கு வரும் வியாழன் கிழமைக்குள்(17) குழந்தை பிறக்கலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ஐஸ்வர்யா ராய் நேற்று இரவு அங்குள்ள 5-வது மாடியில் பலத்த பாதுகாப்புடன் அனுமதிக்கப்பட்டார். ஐஸ்வர்யா ராயை இன்று காலை பரிசோதித்த டாக்டர்கள், குழந்தை நல்ல உடல் நலத்துடன் உள்ளதாக திருப்தி தெரிவித்தனர். 17-ந் தேதி (வியாழக்கிழமை) மதியம் ஐஸ்வர்யாராய்க்கு குழந்தை பிறக்கலாம் என்று டாக்டர்கள் கணித்துள்ளனர்.

No comments:

Post a Comment