Monday, November 14, 2011

காலில் வீழ்ந்து வணங்கி உலக சாதனை படைத்த கனேடிய (புலிகளின்) பாராளுமன்ற எம்.பி ராதிகா சிற்சபேன்!

காலில் வீழ்ந்து வணங்கி உலக சாதனை படைத்த கனேடிய (புலிகளின்) பாராளுமன்ற எம்.பி ராதிகா சிற்சபேன்!

உலகத்திலேயே எந்தவொரு எம்.பியும் இதுவரை யாருடைய காலிலும் வீழ்ந்து வணங்கியதாக சரித்திரமே கிடையாது. ஆனால் உலகத் தமிழர்களின் சரித்திரத்திலே இடம்பிடித்த (புலிகளின்)கனேடிய பாராளுமன்ற எம்.பி ராதிகா சிற்சபேன் அந்த சாதனையை முறியடித்திருக்கிறார்.

காலில் வணங்கும் கலாச்சாரத்தை பின்பற்றும் தமிழகத்தில் கூட எந்தவொரு எம்.பியும் யாருடைய காலிலும் இதுவரை வீழ்ந்து வணங்கிதாக நாங்கள் கேள்விப்படவில்லை. ஆனால் வெளிநாட்டு கலாச்சாரத்தில் வளர்ந்த பெண் ஒருவர் காலில் வீழந்து வணங்கும் பழக்கவழக்கத்தை எப்படி பழகினார்? எம்.பி ராதிகா சிற்சபேனுக்கு இதை கற்றுக்கொடுத்தது யார்? யாரிடமிருந்து இந்த பழக்கவழக்கத்தை பழகினார்?

சாதாரண மனிதர்களே மற்றவர்களின் காலில் வீழ்ந்து வணங்குவதற்கு கூச்சப்படும் படும்போது, ராதிகா சிற்சபேன் எப்படி, யாரிடமிருந்து காலில் வீழ்ந்து வணங்கும் கலாச்சாரத்தை கற்றுக்கொண்டிருப்பார் என்பதையிட்டு பெரிசாக நாம் யோசிக்க தேவையில்லை. (காணொளியை பாருங்கள் எல்லாம் புரியும்)

(யார் எவ்வளவு தான் படித்தாலும்…, பெரிய பதிவியிலிருந்தாலும், அவரவர் வாழும் சூழல், அவரை சூழ்ந்துள்ள மனிதர்கள், இவைகள் தான் ஒரு மனிதனை வழிநடத்துகின்றன. கனேடிய எம்.பி ராதிகா சிற்சபேனும் அதற்கு விதிவிலக்கல்ல. அவரை சூழ்ந்துவரும் மனிதர்கள் என்ன செய்தாரோ அதைதான் அவரும் செய்கிறார். )

இவர் யாருடைய காலில் வீழ்ந்து வணங்கினார் என்பது இப்பொழுது பிரச்சனையல்ல. இவர் மற்றவர்களின் காலில் வீழ்ந்து வணங்குவது இவரது பதவிக்கும், தகுதிக்கும் உயர்வானதா? தமிழர்களை பிரதிநித்துவப்படுத்தும் ஒருவர் இப்படியான செயல்கள் செய்வதன் மூலம், இப்படியான பழக்கவழக்கங்கள் தமிழர்களுக்குரியவை தான் என்பதை பறைசாற்ற முற்படுகிறாரா?

காலில் வீழ்ந்து வணங்குவது தமிழர்களின் பழக்கவழக்கமான தொன்றல்ல. அனேகமாக பிராமணியர்களின் போதனைகளை பின்பற்றும் தமிழர்களின் பழக்கவழங்கள் தான் இந்தமாதிரியான மடைமைதனமான செயலாகும்.

ராதிகா சிற்சபேன் கனேடிய பாராளுமன்றத்தில் ஒரு எம்.பியாக தெரிவுசெய்யப்பட்டதில் உலகத் தமிழனே சந்தோசப்பட்டான். குறிப்பாக கனடாவில் வாழும் 3 இலச்சம் தமிழர்களும் ராதிகா சிற்சபேனை நினைத்து பெருமையடைந்திருப்பார்கள். ஆனால் இப்படிபட்ட ஒருசெயலால் கட்டாயம் ஒட்டுமொத்த உலகத் தமிழர்களும் வெற்கி தலைகுனியவேண்டும்.

இதற்கு முன்னர் இப்படி எத்தனை பேரின் காலில் வீழ்ந்து வணங்கினாரோ தெரியவில்லை. இனிமேல் காலங்களில் இப்படியான செயல்களில் ராதிகா சிற்சபேன் ஈடுபடாமலிருக்கவேண்டும் என்பதற்காகவே இதை பற்றி பிரஸ்தாபிக்க முனைகின்றோமே ஒழிய அவரை அவமதிப்பதாக கருதவேண்டாம்.

கல்வி அமைச்சரின் காலில் விழுந்து வணங்க மறுத்த முல்லைத்தீவு தமிழ் மாணவன்

சிங்கள கல்வி அமைச்சர் பந்துல குணவர்தனவின் காலில் விழுந்து வணங்க மறுத்த முல்லைத்தீவு தமிழ் மாணவன் பரமேஸ்வரன் சேதுராகவன் பற்றி, அவன் செய்த செயலினை வீரமாகவும், இனவாத சிந்தனையுடன் கருதி தங்களுக்குள் தாங்களே பட்டிமன்றம் வைத்து புழங்காகிதம் கொண்டு புகழ்ந்து பரப்புரைகள் செய்த புலியூடகங்கள், மாபெரும் கனேடிய பாராளுமன்ற எம்.பி ராதிகா சிற்சபேன் ஒரு இந்திய சினிமா பாடகர் ஒருவரின் காலில் வீழ்ந்து வணங்கியதையிட்டு இதுவரை எதுவுமே பேசாமல் இருப்பதன் காரணம் என்ன?

அனேகமாக இதையிட்டு மிகவும் பெருமையடைந்திருப்பார்கள் என நினைக்கிறேன். இதேபோன்று யாராவது வெள்ளைகாரர்களின் கால்களில் வீழ்ந்து வணங்கினாலும் நம்மவர்கள் அதைபெருமையாக தான் நினைப்பார்கள்.

பெருமையான மனிதர்களுக்கு மதிப்பளிப்பதும், மரியாதை கொடுப்பதும் வரவேற்புக்குரியதும், வழமையானதுமே. ஆனால் காலில் வீழ்ந்து வணங்குவது சிறுபிள்ளைத்தனம்.

கனேடிய பிரதமர் ஸ்டீவன் ஹார்பரின் காலில் வீழ்ந்து வணங்கியிருந்திருந்தாலும் நமது மக்களுக்கு எதாவது நன்மை கிடைத்திருக்கும்.

காலில் வீழ்ந்து வணங்குவது யாருடைய கலாச்சாரம்?

No comments:

Post a Comment