Monday, November 14, 2011
ஒசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் டெம்பிள் லேண்ட் ஹட்கோ பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். விழுப்புரத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சுந்தரலட்சுமி (48). இவர்களது மகள் மஞ்சு சுபாஷினி (15). இவர் ஒசூர் ரயில்வே ஸ்டேஷன் அருகே உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு மாணவி. இவரை பள்ளியில் விட சுந்தரலட்சுமி இன்று காலை 7.45 மணியளவில் டூவீலரில் அழைத்து சென்றார்.
தேன்கனிக்கோட்டை ரோட்டில் ராகவேந்திரா தியேட்டர் அருகே சென்றபோது முன்னால் சென்ற லாரி திடீரென நின்றுள்ளது. இதனால் லாரியை பின்தொடர்ந்து சென்ற சுந்தரலட்சுமி சடன் பிரேக் போட்டுள்ளார். இதில் இருவரும் வண்டியுடன் சேர்ந்து கீழே விழுந்தனர்.
அப்போது எதிரே வந்த செப்டிக் டேங்க் கிளீன் செய்யும் லாரி அவர்கள் மீது ஏறி இறங்கியது. இதில் தாய், மகள் இருவரும் மூளை சிதறி, உடல் நசுங்கி பலியாயினர். தகவலறிந்த ஒசூரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். மாணவி அணிந்திருந்த பள்ளி ஐடி கார்டு மூலம் அடையாளம் காணப்பட்டு உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த உறவினர்கள் இறந்த கிடந்த அம்மா, மகளைப் பார்த்து கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

No comments:
Post a Comment