Friday, November 25, 2011தென்பகுதி கடலில் கடும் காற்றில் சிக்கி உயிரிழந்த மூன்று மீனவர்களின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மாத்தறை மாவட்ட செயலாளர் டப்ளியூ.கே.கே.அதுகோரள தெரிவிக்கின்றார்.
மாத்தறை பகுதியிலிருந்து கடலுக்கு சென்ற மேலும் 15 மீன்பிடி படகுகள் அனர்த்தத்திற்கு இலக்காகியுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளதாக மாவட்ட செயலாளர் கூறினார்.
இந்த படகுகளில் இருந்த மீனவர்களை மீட்கும் நடவடிக்கைகள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
உயிரிழந்த மூன்று மீனவர்களும் வெலிகம மற்றும் தெவிநுவர பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
இதேவேளை தெனியாய பஸ்கொட பகுதியில் மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மாத்தறை மாவட்ட செயலாளர் டப்ளியூ.கே.கே.அதுகோரள கூறினார்.
No comments:
Post a Comment