Friday, November 25, 2011பாராளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டமைக்கு எதிராக சரத் பொன்சேகா தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று (25) கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறித்த மனு எதிர்வரும் டிசம்பர் 15ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
ரஞ்சித் டி சில்வா தலைமையிலான மூன்று நீதியரசர்கள் குழு முன்னிலையில் குறித்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, மனுதாரர் மற்றும் பிரதிவாதிகள் தரப்பில் முன்வைக்கப்பட்ட கருத்துக்களை பரிசீலித்த நீதிமன்றம் விசாரணையை பிற்போட்டுள்ளது.
இரண்டாவது இராணுவ நீதிமன்றில் தனக்கு 30 மாதகால சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பறிக்க பாராளுமன்ற செயலாளர் நடவடிக்கை எடுத்தமை சட்டவிரோதமானது என அறிவிக்கும்படிக் கோரி சரத் பொன்சேகா மேன்முறையீடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment