Friday, November 25, 2011

தேசிய வருமான வரித் திணைக்கள மாத்தறை அலுவலக உத்தியோகத்தர் ஒருவர் கைது!

Friday, November 25, 2011
இலஞ்ச குற்றச்சாட்டின் பேரில், தேசிய வருமான வரித் திணைக்களத்தின் மாத்தறை அலுவலக மதிப்பீட்டு உத்தியோகத்தர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தவணைக் கட்டணங்களைக் குறைத்து அறிக்கை தயாரித்து வழங்குவதற்காக வல்கம பகுதி வர்த்தகரிடம் ஒரு இலட்சம் ரூபா இலஞ்சம் கோரியுள்ளதாக இலஞ்ச - ஊழல் விசாரணை ஆணைக்குழு குறிப்பிடுகின்றது.

இந்தத் தொகையில் 75 ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொண்ட சந்தர்ப்பத்தில், சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டதாகவும் இலஞ்ச - ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவிக்கின்றது.

No comments:

Post a Comment