Friday, November 25, 2011இலங்கைக்கு இவ்வருடம் வருகை தந்த 750,000 ஆவது வெளிநாட்டு உல்லாசப் பிரயாணி இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் வரவேற்கப்பட்டார். இலங்கை உல்லாசப் பயணத்துறையில் இது புதிய சாதனையாகும். வருடமொன்றில் 700,000 இற்கும் அதிகமான உல்லாசப் பிரயாணிகள் இலங்கைக்கு இலங்கைக்கு வருவது இதுவே முதல் தடவையாகும்.
பலஸ்தீனத்தைச் சேர்ந்த கட்டாரில் வசிப்பவர்களான மொஹமட் அல் பார்டினி, அவரின் மனைவி மொனா அலாத்தர் ஆகியோரே இவ்வருடத்தின் 750,000 ஆவது உல்லாசப் பயணிகளாக இலங்கை வந்துள்ளனர்.
டோஹாவிலிருந்து இன்று மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இவ்விருவரும் இலங்கை உல்லாசப் பிரயாண சபை மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு ஆகியவற்றைச் சேர்ந்த குழுவினரால் வரவேற்கப்பட்டனர். அவர்களுக்கு இலங்கை உல்லாச பிரயாண சபையினால் விசேட பரிசும் சலுகைப் பொதியொன்றும் வழங்கப்பட்டன. இதற்குமுன் அதிகபட்சமாக கடந்த வரும் 654,476 உல்லாசப் பயணிகள் இலங்கைக்கு வந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment