Friday, November 25, 2011யாழ்.மாவட்டத்தில் இளைஞர் யுவதிகள் இலங்கைப் பொலிஸ் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலையம் இன்று வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.
இதன்படி உதவிப் பொலிஸ் பரிசோதகர், கான்ஸ்டபிள் ஆகிய பதவிகளுக்கு இளைஞர் யுவதிகளை இணைப்பதற்கான நேர்முகத் தேர்வுகள் நவம்பர் 28, 29, 30ம் திகதிகளில் யாழ்.துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளன.
இலங்கைப் பொலிஸ் சேவையில் இணைந்துகொள்ள விரும்பும் அனைத்து இளைஞர், யுவதிகளும் இந்த நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளுமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment