Friday, November 4, 2011

முக்கியஸ்தர்களின் பாதுகாப்புக்காக செல்லும் போது பொலிஸாரைத் தவிர ஏனையவர்கள் ஆயுதங்கள் வைத்திருக்க முடியாது-லலித் வீரதுங்க!

Friday, November 04, 2011
முக்கியஸ்தர்களின் பாதுகாப்புக்காக செல்லும் போது பொலிஸாரைத் தவிர ஏனையவர்கள் ஆயுதங்கள் வைத்திருக்க முடியாது என்று ஜனாதிபதியின் செயலாளர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க இதற்கான பணிப்புரையை பொலிஸார் பரிசோதகர்களுக்கு விடுத்துள்ளார்.முக்கியஸ்தர்களின் பாதுகாப்பு கடமைகளின் போது பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கடமையில் இருக்கவேண்டும்.

அவர்கள் பொலிஸாரை தவிர வெளியார் எவரும் குறித்த பாதுகாப்பு கடமையின் போது ஆயுதங்களை வைத்திருக்கிறாரா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று லலித் வீரதுங்க பணித்துள்ளார்.

இதுவரை காலமும் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் பாதுகாப்பு பிரிவுகள் பொலிஸாரின் கீழ் இடம்பெறவில்லை.

புதிய நடைமுறையின்படி அவையும் பொலிஸாரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படுகின்றன.

No comments:

Post a Comment