Sunday, November 06, 2011
கரந்தெனிய பகுதியில் வைத்திய அதிகாரி ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பாக இரண்டு இராணுவ உறுப்பினர்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் சரணடைந்துள்ளனர்.
இராணுவத்தின் பொலிஸ் பிரிவினால் நேற்று பிற்பகல் குறித்த இரண்டு சந்தேகநபர்களும் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இதற்கமைய குறித்த வைத்திய அதிகாரியின் கொலை தொடர்பில் இதுவரை ஐந்துபேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் ஏற்கனவே கரந்தெனிய பகுதியில் உள்ள மருத்துவ ஆய்வுகூட மொன்றின் உரிமையாளரும் இராணுவ கெப்டன் ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.
கொலை செய்யப்பட்ட வைத்திய அதிகாரி தொடர்பில் தகவல்களை திரட்டியதாக கூறப்படும் கரந்தெனிய பகுதியைச் சேர்ந்த மற்றுமொரு நபரும் நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதை அடுத்து குறித்த பகுதியில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பாகவும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment