Sunday, November 6, 2011

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனை தேவையில்லை-பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ!

Sunday, November 06, 2011
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனை தேவையில்லை என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

யுத்தத்தின் பின்னரான இலங்கையில் எவ்வாறு இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது தொடர்பில் ரணில் விக்ரமசிங்க ஆலோசனை வழங்க வேண்டிய அவசியமில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச விவகாரம் மற்றும் இராணுவ நடவடிக்கைகள் குறித்து ரணில விக்ரமசிங்க வெளியிடும் கருத்துக்களை பொருட்படுத்தத் தேவையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

புலிகளுடன் ரணில் ஏற்படுத்திக் கொண்ட யுத்த நிறுத்த உடன்படிக்கை பாரிய நெருக்கடி நிலைமையை ஏற்படுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

புலிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்து யுத்தத்தில் இடம்பெயர்ந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டுமென அண்மையில் ரணில் விக்ரமசிங்க கோரியிருந்தார்.

யுத்தத்தின் பின்னர் நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி முயற்சிகள் குறித்து ரணில் விக்ரமசிங்கவிற்கு எதுவித விளக்கமும் கிடையாது என கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஆயுதங்களை கப்பல்களின் மூலம் புலிகள் இறக்கிய போது ரணில் விக்ரமசிங்க என்ன செய்தார் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

புலிகளின் வெளிநாட்டு வலையமைப்புடன் அரசாங்கம் தொடர்ச்சியாக போராடி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment