Tuesday, November 29, 2011காணாமல் போதல் சம்பவங்கள் அதிகளவில் தீர்க்கப்படாத நாடுகளின் வரிசையில் இலங்கை இரண்டாம் நிலை வகிப்பதாக சர்வதேச மன்னிப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.
ஆயிரக் கணக்கான காணாமல் போதல் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் இன்னமும் பூர்த்தியாகவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனால் ஆயிரக் கணக்கான குடும்பங்கள் தொடர்ந்தும் பாதிப்புக்களை எதிர்நோக்கி வருவதாக சர்வதேச மன்னிப்புச் சபையின் இலங்கைக்கான நிபுணர் யோலண்டா பொஸ்டர் தெரிவித்துள்ளார்.
சித்திரவதை சம்பவங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தல் தொடர்பில் அண்மையில் லண்டனில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேககிக்கப்படும் தமிழர்கள் தொடர்ந்தும் அச்சுறுத்தல்களை எதிர்நோக்கி வருவதகாகத் தெரிவித்துள்ளார்.
குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற சர்வதேச நியதிக்கு மதிப்பளிக்க வேண்டுமாயின் சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை விவகாரங்களை ஏனைய நாடுகள் பிழையான முன்னுதாரணமாகக் கொள்ளாமல் இருப்பதற்காகவும் விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புலிகள் உள்ளிட்ட சகல தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட குற்றச் செயல்கள் விசாரணை செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment