Tuesday, November 22, 2011வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சுமார் 2000 கைதிகள் தற்போது மஹர மற்றும் வடறுக்க சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
2013 ஆம் ஆண்டளவில் வெலிக்கடை சிறைச்சாலையை கொழும்பிலிருந்து இடம் மாற்றுவதற்கு திட்டமிட்டுள்ளதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர குறிப்பிட்டார்.
தற்போது நான்காயிரத்துக்கும் அதிகமான கைதிகள் வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்காக மஹர மற்றும் வடறுக்க சிறைச்சாலைகளில் கட்டிடங்களை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சந்திரசிறி கஜதீர மேலும் சுட்டிக்காட்டினார்.
No comments:
Post a Comment