Tuesday, November 22, 2011

இலங்கை மீனவர்கள் ஒன்பது பேர் இந்திய கரையோர பாதுகாப்பு பிரிவினரால் கைது!

Tuesday, November 22, 2011
இலங்கை மீனவர்கள் ஒன்பது பேர் இந்திய கரையோர பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் பயணித்த இரண்டு படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆந்திர மாநிலத்தின் நிசாம் பட்டிணம் கடற்பகுதியில் இந்த மீனவர்கள் கைதுசெய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

இந்திய கரையோர கடற்பாதுகாப்பு பிரிவினருக்கு சொந்தமான ஐ.சீ.ஜீ.எஸ் (ICGS) சாரங் கப்பலின் ஊடாக இந்த மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கல்ப் ஸ்டார் மெரீனா (GULF STAR MARINA) மற்றும் ச்சம்பா (CHAMPA) ஆகிய மீன்பிடி படகுகள் இந்திய கடற்கரையோர கடற்பாதுகாப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

திருகோணமலை பகுதியிலிருந்து கடலுக்கு சென்ற குறித்த படகுகளில் இருந்து ஜீ.பீ.எஸ் (GPS), ராடர் (RADER) உள்ளிட்ட பல உபகரணங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்திய கடற் பாதுகாப்பு பிரிவு தெரிவிக்கின்றது.

No comments:

Post a Comment