Thursday, November 3, 2011

அரசாங்கம் வடக்கு கிழக்கில் சிங்கள மக்களை குடியேற்றவில்லை – உதயகாந்த!

Thursday, November 03, 2011
அரசாங்கம் வடக்கு கிழக்கில் சிங்கள மக்களை குடியேற்றவில்லை என காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சின் சிரேஸ்ட துணைச் செயலாளர் பீ.எம்.பீ. உதயகாந்த தெரிவித்துள்ளார்.

சிங்கள மக்களுக்கு அதிகளவில் காணிகளை வழங்கி சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்ளும் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கி;ழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர். துரைரட்னம் வெளியிட்ட கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் சுமார் 20000 ஏக்கர் காணிகள் சிங்கள மக்களிடையே பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக துரைரட்னம் குற்றம் சுமத்தியுள்ளார்.

மாகாண காணி ஆணையாளரினால் காணி விநி;யோகம் நடைபெறுவதாகவும் இதில் எந்தவிதமான அநீதிகளும் இடம்பெற வாய்ப்பில்லை எனவும் உதயகாந்த தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனு மற்றும் ஏனைய சில காரணிகளினால் வடக்கு கிழக்கில் காணிப் பதிவு மற்றும் பகிர்ந்தளிக்கும் நடவடிக்கைகள் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகளில் மஹாவலி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான காணிகள் காணப்படுவதாகவும் அவற்றை அதிகாரசபையே பகிர்ந்தளிப்பதாகவும், இந்த நடவடிக்கைகளுக்கும் காணி அமைச்சிற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டு;ளளார்.

No comments:

Post a Comment