Sunday, November 27, 2011

நாட்டின் உள்விவகாரங்களில் அமெரிக்கா தேவையின்றி தலையீடு செய்வதாக இலங்கை அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது!

Sunday, November 27, 2011
நாட்டின் உள்விவகாரங்களில் அமெரிக்கா தேவையின்றி தலையீடு செய்வதாக இலங்கை அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. நாட்டின் உள்நாட்டு அரசியல் விவகாரங்களில் அதிகளவில் தலையீடு செய்வதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு அளித்த தண்டனையை மையப்படுத்தி ஆளும் கட்சியில் பிளவினை ஏற்படுத்த முயற்சி;க்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கத் தூதரக அதிகாரிக்கும் அமைச்சருக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. அமெரிக்க தூதுவரின் நடவடிக்கைகள் குறித்து இலங்கை அரசாங்கம் அதிருப்தி அடைந்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

No comments:

Post a Comment