Friday, November 18, 2011ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக கட்டமொன்றின் சிவிலுனுக்குள் இருந்து உள்ளூர் தயாரிப்பான ஐந்து குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
குழாய்களில் வெடிமருந்து நிரப்பப்பட்டு தயாரிக்கப்பட்டிருந்த இந்தக் குண்டுகள் புதிய கலைக் கேந்திர கட்டடத்தின் சிவிலுனுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண குறிப்பிட்டார்.
சம்பவம் தொடர்பாக எவரும் கைதுசெய்யப்படவில்லை என்பதுடன், மிரிஹான பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment