
Friday, November 18, 2011காங்கேசன்துறையிலிருந்து பளை வரையான சுமார் 56 கிலோமீற்றர் தூரம் ரயில் பாதை புனரமைப்பு செய்வதற்கான இலங்கை - இந்திய உடன்படிக்கையொன்று சைச்சாத் திடப்பட்டுள்ளது.
இந்த உடன்படிக்கையை இலங்கை ரயில்வே பொதுமுகாமையாளர் பி.ஏ.பி. ஆரியரத்ன இந்தியாவின் ஐ.ஆர்.சி.ஓ.என். நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மோகன் திவாரி ஆகியோர் கைச்சாத்திட்டுள்ளனர்.
இதன்போது அமைச்சர் குமார் வெல்கம, இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே காந்தா போக்குவரத்து அமைச்சின் செயலாளர் தம்மிக்க பெரேரா இந்தியாவின் ரயில்வே அமைச்சின் சார்பில் ஏ.பி. மிஸ்ரா ஆகியோர் கலந்துகொண்டனர்.
149.30 மில்லியன் டொலர் செலவில் அமைக்கப்படவுள்ள இப்பாதை புனரமைப்புப் பணிகள் இரண்டு வருடத்திற்குள் பூர்த்தியடையும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment