Sunday, November 20, 2011

விபத்துக்களின்போது காயமடைந்தோருக்கு சிகிச்சைகளிக்க விசேட அதிரடிப்படைக் குழு!

Sunday, November 20, 2011
அதிவேக வீதியில் ஏற்படக் கூடிய திடீர் விபத்துக்களின்போது காயமடைந்தோருக்கு சிகிச்சைகளிப்பது தொடர்பாக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் குழுவொன்றுக்கு பயிற்சியளிக்கப்பட்டுள்ளது.

24 பேர் அடங்கிய குறித்த குழுவினருக்கு இரண்டு மாத பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிடுகிறது.

அதிவேக வீதியில் இடம்பெறும் வாகன விபத்துக்களின்போது காயமடைந்த ஒருவருக்கு பயிற்சி வழங்குவதே இவர்களது கடமையாகும்.

நோயாளர்களை பாதுகாப்பாக வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வது தொடர்பாகவும் குறித்த பொலிஸ் விசேட அதிரடிப்படையின் குழுவுக்கு பயிற்சியளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு மேலும் தெரிவிக்கிறது.

No comments:

Post a Comment