Sunday, November 20, 2011

யுத்தம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அரசாங்கத்திடம் கோரலாம்!

Sunday, November 20, 2011
இறுதிக் கட்ட யுத்ததத்தின் போது இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எவ்வாறெனினும் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் பற்றியோ அல்லது சம்பவங்கள் பற்றியோ உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு தகவல்களை வெளியிடவில்லை.

செனல்4 ஊடகத்தினால் வெளியிடப்பட்ட ஆவணப்படம் முற்றிலும் திரிபுபடுத்தப்பட்ட ஓர் போலி ஆவணம் என ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. 400 பக்கங்களைக் கொண்ட அறிக்கை ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் சட்ட மா அதிபரும், உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் தலைவருமான சீ.ஆர். டி சில்வா இன்றைய தினம், உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் அறிக்கையை ஜனாதிபதியிடம் ஒப்படைக்க உள்ளார்.

கடந்த ஆண்டு மே மாதம் 15ம் திகதி ஆணைக்குழுவினை ஜனாதிபதி நிறுவியிருந்தார். 2002ம் ஆண்டு யுத்த நிறுத்த உடன்படிக்கை முதல் 2009ம் ஆண்டு யுத்தம் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்ட சம்பவம் வரையில் ஆணைக்குழுவில் தகவல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

தேசிய நல்லிணக்கத்தை எவ்வாறு ஏற்படுத்துவது என்பது குறித்து பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மீண்டும் முரண்பாடுகள் ஏற்படுவதனை தடுப்பதற்கு நிறுவன மற்றும் அரசியல் ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
சகல இன சமூகங்களுக்கும்; இடையில் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதன் முக்கியத்துவம் இதில் விதந்துரைக்கப்பட்டுள்ளது.

அரசியல்வாதிகள் தங்களது வாக்குகளை தக்க வைத்துக் கொள்ளும் நோக்கில் மேற்கொள்ளும் நடவடிக்கைகளினால் தேசிய இனப்பிரச்சினை ஏற்பட்டதாக பொதுவாக மக்கள் கருதுகின்றனர் என அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குரோத அரசியலிலிருந்து விடுபட வேண்டிய காலம் மலர்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. நபர்களின் இன அடையாளங்களை விடவும் நாட்டின் அடையாளத்தை முதனிலைப்படுத்த முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் எந்தவொரு பகுதியிலும் காணிகளை கொள்வனவு செய்யக் கூடிய உரிமை சகல இலங்கையர்களுக்கும் காணப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment