Sunday, November 20, 2011வாரியபொல பொத்துவெவ பிரதேசத்தில் சட்டவிரோத ஆயுதங்களை வைத்திருந்த இரண்டு சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று மாலை வாரியபொல பொலிஸாருக்கு கிடைத்த தகலை அடுத்து பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்ததேக நபர்களிடமிருந்து ரி56 ரக துப்பாக்கி ஒன்றும் சிறிய ரக கைத்துப்பாக்கி ஒன்றும் ரி56 ரக துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் ரவைகள் சிலவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேக நபர்களை இன்றைய தினம் வாரியபொல மாவட்ட நீதவான் முன்னலையில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பொலன்னறுவை சிறையிலிருந்து தப்பியோடிய கைதி கைது!
பொலன்னறுவை சிறையிலிருந்து தப்பியோடிய கைதி ஒருவர் சில மாதங்களுக்கு பின்பு கைது செய்யப்பட்டுள்ளார்.
மாத்தளை பிரதேசத்தை சேர்ந்த குற்றத்தடுப்பு அதிகாரிகள் குழுவினரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் அவிசவெல்ல, மதோல, உத்யான வீதியை சேர்ந்தவரென பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கடந்த பெப்ரவரி மாதம் சிறையிலிருந்து தப்பயோடிய குறித்த நபர் தம்புள்ளை, கொகரெல்ல, மாத்தளை, இரத்தினபுரி போன்ற பிரதேசங்களில் இடம்பெற்ற பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்படைய நபர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த கைதியிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் மாத்தளை மாவட்ட நீதவான் முன்னலையில் இன்று அவர் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment