Friday, November 25, 2011

வெளிநாடுகளில் புலிகளின் சின்னங்கள் - அரசாங்கம் கண்டனம்!

Friday, November 25, 2011
புலிகளின் இலட்சினைகள், சின்னங்களை, வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்பவர்கள் பரவலாக பயன்படுத்தி வருகின்றமை சட்டவிரோதமானவை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

வெளியுறவுகள் துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.

புலிகளின் கொடிகள் வெளிநாடுகளில் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன.

இலங்கையின் சில தூதரகங்கள் தாக்கப்பட்டதன் பின்னர், புலிகளின் கொடிகளை கௌரவமாக காட்சி படுத்துக்கின்றனர்.

இதில் சட்டத்திட்டங்கள் எங்கு பேணப்படுகின்றன என்பது கேள்விக்குறியாக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

தடை செய்யப்பட்டுள்ள இயக்கம் ஒன்றின் சின்னங்கள், கொடிகள், இலட்சினைகளை பயன்படுத்துவது சட்ட விரோதமானது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை பெரும்பாலானா புலம்பெயர்ந்த தமிழர்கள், அரசாங்கத்தை புரிந்துக் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பெரும்பாலான புலம்பெயர்ந்த தமிழர்கள், வடக்கில் வாழ்கின்ற தமிழ் மக்களின் நல வாழ்வு தொடர்பில் சிறந்த பங்களிப்பை வழங்கி வருகின்றனர்.

எனினும், புலிகள் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டமையை ஏற்றுக் கொள்ளாத ஒரு பிரிவினரும், புலம்பெயர்ந்தோருக்கு இடையில் இருப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அவர்களே அரசாங்கத்திற்கு எதிரான செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment