Thursday, November 24, 2011பாரீஸ் : பேசும் பட காமெடி மூலமாக உலகம் முழுவதும் பல கோடி ரசிகர்களின் இதயங்களை கொள்ளை கொண்டவர் சார்லி சாப்ளின். அவரது பேத்தி கார்மன் சாப்ளின். இவர் நடிகை, எழுத்தாளர், இயக்குனர், இசை அமைப்பாளர் என பல முகம் கொண்டவர். சாப்ளினின் இன்னொரு பேத்தி டோலோரஸ். இவரும் பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், அமெரிக்க எழுத்தாளர் ட்ரூமேன் கபோட் எழுதிய ‘பிரேக்ஃபாஸ்ட் அட் டிபனி’ என்ற நாவலை மையமாக கொண்டு ‘பாம்பே நைட்ஸ்’ என்ற படத்தை கார்மன் இயக்க உள்ளார். இதில் ஹீரோயினாக டோலோரஸ் நடிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் முழுக்க மும்பையில் நடக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதுபற்றி கார்மன் சாப்ளின் கூறுகையில், ‘‘சாப்ளினின் பேத்திகள் என்ற அறிமுகம் எங்களுக்கு போதும். அந்த அளவுக்கு பல தலைமுறைக்கும் சேர்த்து பெருமை தேடி தந்திருக்கிறார் எங்கள் தாத்தா சார்லி’’ என்றார்.
No comments:
Post a Comment