
Thursday, November 24, 2011இலங்கை செஞ்சிலுவைச் சங்க மட்டக்களப்பு கிளையின் அனுசரணையுடன் காத்தான்குடி பிரிவு நடாத்திய செஞ்சிலுவை கொள்கை பரப்பு நிகழ்ச்சி இன்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். மட்டக்களப்பு கிளையின் உபதலைவர் எம்.எஸ்.எம்.அப்துல்லாஹ், ICRC மட்டக்களப்பு இணைப்பாளர் பிரபாகரன், SLRC முதலுதவி இணைப்பாளர் கஜன், காத்தான்குடி பிரிவுச் செயலாளர் எம்.ஏ.எம்.இர்ஷாத் ஆகியோர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment