http://www.youtube.com/watch?v=XRB_wKyVO90&feature=player_embedded
இலங்கையில் கடந்த மூன்று தசாப்தமாக நிலவிய பயங்காரவாத சூழ்நிலை காரணமாக சுகந்திரமாக வாழ முடியாது, தமது நிம்மதியை இழந்த பலர், வேறு நாடுகளில் சென்று வாழ்கின்றனர்.
தற்போது யுத்தமுடிந்து இரண்டு வருடங்கள் கடந்துவிட்டன. நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையையும் சமாதானத்தையும் அனுபவித்தவண்ணம் தமது வாழ்கையை நிம்மதியாக நடத்திவருகின்றனர். நாடு துரித கதியில் அபிவிருத்தியின் பாதையில் சென்றுகொண்டிருக்கின்றது. உலக நாடுகள் அதிசயக்கும் வகையில் புனர்வாழ்வு, மீள்நிர்மானம், மீள்குடியமர்வு மற்றும் மதிவெடியகழ்வு செயற்பாடுகள் யாவும் திறம்பட இடம்பெற்று வருகின்றன.
இவற்றையெல்லாம் பொறுக்கமுடியாத சில விடுதலைப்புலி ஆதரவு ஊடகங்கள், இந் நல்ல தகவல்களை வெளியிட்டால் எங்கே எமது இலாபங்கள் பறிபோய்விடுமே என அஞ்சி உண்மைக்கு மாறான பல தகவல்களை வெளியிட்டு வருகின்றன.
தமது பெற்றோர்களையும் ஏனைய உறவுகளை விட்டுப்பிரிந்து, வெளிநாட்டில் வாழ்ந்துவரும் நம்மவர்களில் பலர் எப்போது யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்படும்? எப்போது நாம் எமது தாய்நாட்டிற்கு சென்று மீண்டும் உறவுகளை காண்பது? மீண்டும் எமது நாட்டிற்கு செல்லும் சூழ்நிலை ஏற்படுமா? என ஏங்கிக்கொண்டிருந்தனர்.
கடந்த 2009 மே இல் நாடு பயங்கரவாத்தில் இருந்து முற்றாக மீட்க்கப்பட்டதைத் தொடர்ந்து, நாடு முழுமையாக சுகந்திரம் அடைந்தது. யுத்தக் கரைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டவாறு, ‘ஆசியாவின் அதிசயம்’மாக மாறும் நோக்கை தனது இலக்காக்கியது.
இதற்கிடையில் தமது சுயலாபத்தை தக்கவைத்துக் கொள்ள முயற்சிக்கும் சில சக்திகளுக்கு உதவும் சில ஊடகங்கள், இலங்கையில் நிலவி வரும் அமைதி சூழ்நிலையை மக்களுக்கு தெரியப்படுத்தாமல் திரிவுப்படுத்தி பொய் தகவல்களை வழங்கி, மக்களை ஏமாற்றி வருகின்றன. இவற்றின் மூலம் அவ் ஊடகங்களுக்கு கிடைக்கும் வருமாணம் மேலும் அதிகரித்தவண்ணம் செல்கின்றதே தவிர மக்களின் வாழ்வுக்கு எந்தப்பயனும் இல்லை.
இதைத்தவிர புலம்பெயர் நாடுகளில் வாழும் சில விடுதலைப்புலி ஆதரவுச் சக்திகளும் தமது வருமாணத்தை ஈட்டிக்கொள்ளும் நோக்கில் இச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வாறான தீயசக்திகளின் செயற்பாடுகள் மூலம், மூன்று தசாப்த கால தமது நிம்மதியை இழந்து தவிர்துக்கொண்டிருந்த தமிழ்மக்கள் சுகந்திரக் காற்றை நுகரமுடியாத நிலையை ஏற்படுத்த முயற்சித்தவண்ணம் உள்ளனர். இத் தகவல்களை நம்பிய பல புலம்பெயர் தமிழ் மக்கள், இலங்கை தொடர்பாக பிழையான நிலைப்பாட்டை கொண்டிருந்ததுடன், மீண்டும் சொந்த நாட்டிக்கு திரும்பி வர அச்சமடைந்த நிலையில் புலம்பெயர்நாடுகளிலே வாழ்ந்து வருகின்றனர்.
இத் தகவல்கள் பற்றி சந்தேகத்திற்குள்ளான சில புலம்பெயர் தமிழ் மக்கள், தமது தாய்நாட்டிற்கு சென்றே உண்மை நிலவரத்தை கண்டறிய வேண்டும் என்ற நோக்கில் இலங்கைக்கு வந்துள்ளனர். இவ்வாறு வருகை தந்த சிலர் இங்கு தங்கி தமது குடும்பங்களுடன் சந்தசமாக வாழ்கின்றனர்.
ஊடகங்களில் வெளிவந்த தகவல்களை நம்பி இலங்கைக்கு வர அச்சமடைந்த சிலரும்,
அண்மையில் வடக்கில் வாழும் தமது உறவினர்களை வந்து பார்த்து விட்டு போவதற்காக இலங்கை்கு வந்துள்ளனர்.
இவர்கள் தமது உணர்வுகளை எம்மிடம் பகிர்ந்து கொன்டனர்.
நாம் உண்மையிலேயே அதிர்ச்சிக்குள்ளானோம். ஏனெனில் நாடு முற்றுமுழுதாக மாற்றமடைந்திருக்கின்றது. நாம் இங்கிருந்து செல்லும் போது நாட்டில் நிலவிய கெடுபிடியான அச்ச சூழ்நிலை முற்றுமுழுதாக அகற்றுப்பட்டு, நாட்டின் எப்பாகத்திற்கும் எவ்வித அனுமதியும் இன்றி சென்று வரக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வீதிகள் முதல் கட்டிடங்களை வரை பாரிய அபிவிருத்தியைக் கண்டுள்ளன. நாடு ழுழுவதும் அமைதியும் சமாதானமும் நிலவுகின்றது. நாம் இங்கு மகிழ்ச்சியையும் நிம்மதியையும் உணர்ந்தோம். நாம் மீண்டும் எமது உறவுகளுடன் வந்திணைந்து மிகவும் சந்தோசமாக வாழ்கின்றோம். இந் நிலை தொடர்ந்து நிலைத்திருக்க லேண்டும் எனக் கூறினர்.
மேலும் தமது உறவுகளை காண வருகை தந்தவர்கள், அவர்கள் இங்கு மீண்டும் வந்து குடியேற விரும்புவதாகவும் கூறினர்.
இவர்கள் அனைவரும் நாட்டின் தற்போதய நிலை குறித்து மிகுந்த மகிழ்ச்சியுடன் எம்முடன் கலந்துரையாடினர்.

No comments:
Post a Comment