Thursday, November 10, 2011

உலக அமைதி வேண்டி 60 அடி கோபுரத்தில் ஏறி மிரட்டல் விடுத்த வாலிபர்!

Thursday, November 10, 2011
சென்னை : செங்கல்பட்டு புதிய பஸ் நிலையத்தில் அரசு பணிமனை உள்ளது. இங்கு, நேற்று அதிகாலை 4 மணியளவில் ஒரு நபர் வந்தார். அங்குள்ள 60 அடி உயர்கோபுர மின்விளக்கு டவரில் ஏறினார். உச்சிக்கு சென்றதும், ‘கீழே குதித்து தற்கொலை செய்ய போகிறேன் என்று கூச்சலிட்டார். இதை கேட்டதும் அதிர்ச்சி அடைந்த டிரைவர், கண்டக்டர்கள் அங்கு கூடினர். அவரை கீழே இறங்கும்படி கூறினர். ‘உலக அமைதிக்காக ஏறியுள்ளேன் என்று கூறி அந்த நபர் இறங்க மறுத்தார்.

தகவல் அறிந்ததும் செங்கல்பட்டு தீயணைப்பு நிலைய அலுவலர் கோவிந்தராஜன் தலைமையில் வீரர்கள் வந்தனர். அவரை பிடிக்க டவரில் ஏற முயன்றனர். இதனால் கோபம் அடைந்த அவர், ‘மேலே ஏறினால் குதித்து விடுவேன்Õ என மிரட்டினார். இதையடுத்து டவரில் ஏறும் முயற்சியை வீரர்கள் கைவிட்டனர்.

சம்பவ இடத்துக்கு வந்த டவுன் இன்ஸ்பெக்டர் பழனி, ‘என்ன பிரச்னையானாலும் தீர்த்து வைக்கிறேன். கீழே இறங்கு என்று மைக்கில் பேசினார். பணிமனை மேலாளரும் அவரிடம் பேசினார். 5 மணி நேர போராட்டத்துக்கு பிறகு 9 மணியளவில் அவர், கீழே இறங்கினார். அவரை காவல் நிலையத்துக்கு போலீசார் அழைத்துச் சென்றனர்.
விசாரணையில், தேனி மாவட்டத்தை சேர்ந்த மகேந்திரன் (35), கேளம்பாக்கத்தில் வசிக்கிறார். மனைவி, மகன் உள்ளனர் என்பது தெரிந்தது. உலக அமைதிக்காக டவரில் ஏறி நின்று மக்களுக்கு ஏதாவது சொல்ல வேண்டும் என விரும்பினேன் என்று போலீசாரிடம் மகேந்திரன் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment