Thursday, November 10, 2011

இலங்கையில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் தங்க கட்டிகள் பறிமுதல்!

Thursday, November 10, 2011
திருச்சி: இலங்கையில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் சந்திரா (வயது 47) என்ற பெண் வந்துள்ளார். இவர் ஜெயங்கொண்டம் அருகே உள்ள மீன்சுருட்டியைச் சேர்ந்தவர்.

இவரை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது இவர் மறைத்து வைத்திருந்த 10 தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்தனர். ஒரு தங்க கட்டி 100 கிராம் எடை உள்ளதாகவும், தங்கக் கட்டிகளின் மொத்த மதிப்பு சுமார் 30 லட்ச ரூபாய் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக போலீசார் சந்திராவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment