Tuesday, November 15, 2011

மன்னாரில் 600 குடும்பங்கள் மீளக்குடியேற முடியாத நிலையில்!

Tuesday, November 15, 2011
மன்னார் மாவட்டம் பியர் பிரதேசத்தில் கூட்டாக கொள்வனவு செய்யப்பட்டு மீள்குடியேறும் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட காணியில் வீடுகளை அமைப்பதற்கு மன்னார் மாவட்ட அரச அதிகாரிகள் சிலர் தடையாக இருப்பதாக பிரதேச மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.


இது தொடர்பாக அந்த மக்கள் தெரிவித்துள்ள தகவலில் அந்த காணியை கூட்டாக தனியாரிடமிருந்து வாங்கினோம் அதனை கடந்த ஒருமாதகாலமாக துப்பரவு செய்தபின்னர் தற்போது பலர் அதில் வீடுகளை அமைக்க தொடங்கியுள்ளனர் இந்த நிலையில் காணி சீர்திருத்த ஆணைக்குழு அதிகாரிகள் தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து அங்கு வந்த போலீசார் அவற்றை தடுத்து நிறுத்தியுள்ளனர் என்றும் இந்த காணி 1912 ஆம் ஆண்டு தொடக்கம் பல உரிமையாளர்களின் கைகளுக்கு மாறி இறுதியாக காணியின் உரிமையாளராக இருந்த ஒருவரிடமிருந்து தாம் கொள்வனவு செய்துள்ளதாக அவர்கள் தெரிவித்கின்றனர். இது தொடர்பாக அமைச்சர் மற்றும் மற்ற அதிகாரிகளுக்கும் தாம் அறிவித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தக் காணியைச் சுற்றி இராணுத்தினர் பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டுள்ளனர் என்றும் இதனால் 600 குடும்பங்கள் வரை மீளக்குடியேற முடியாது நிர்க்கதிக்குள்ளாகியுள்ளனர் என்றும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை அமைச்சர் ரிஷாட் பதியுதீன், மன்னார் பிரதே செயலாளர் ஸ்டனி டிமெல் ஆகியோர் ஸ்தலத்திற்குச் சென்று நிலைமை குறித்து கேட்டறிந்துள்ளனர் .

தலைமன்னார் பியர் பகுதியில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவிற்கு சொந்தமானதாக சொந்தமானதாக தெரிவிக்கப்படும் 121 ஏக்கர் காணியில் உல்லா விடுதி அமைப்பதற்கான திட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும். இந்தச் சமயத்தில் இந்தக் காணியில் 80 ஏக்கர் துண்டை கையகப்படுத்தி மீள் குடியேற முயற்சி எடுக்கப்படுவதாக காணி சீர்திருத்த ஆணைக்குழு அதிகாரிகள தலைமன்னார் பொலிஸில் முறையிட்டுள்ளனர்.

ஆனால் 1912 ஆம் ஆண்டு எழுதப்பட்ட ஒரு தனியார் காணி பலன் கைமாறி தற்பொழுது இறுதியாக வாங்கியவரிடம் தாங்கள் அதனை விலைக்கு வாங்கி உள்ளதாக பொதுமக்கள் தெவிக்கின்றனர்.

No comments:

Post a Comment