Tuesday, November 15, 2011
இணையத் தளங்களை முடக்கும் அரசாங்கத்தின் திட்டமானது ஏற்புடையதல்ல என சுதந்திர ஊடகம் அமைப்பு அறிவித்துள்ளது.
சீனா, வடகொரியா மற்றும் மியன்மார் போன்ற நாடுகளை பின்பற்றி இலங்கை அரசாங்கம் இணைய ஊடக சுதந்திரத்தை முடக்குவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஜனநாயகம் நிலைநாட்டப்பட்ட நாடுகளில் ஊடக சுதந்திரம் மற்றும் தகவல்களை அறிந்து கொள்ளும் சுதந்திரம் உச்சளவில் உறுதிப்படுத்தப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இணைய ஊடகங்கள் முடக்கப்படக் கூடாது என சுதந்திர ஊடக அமைப்பின் செயலாளர் சுனில் ஜயசேகர தெரிவித்துள்ளார். ஊடக அமைச்சில் பதிவு செய்யாத காரணத்தினால் இணைய தளங்கள் முடக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட போதிலும் இணைய தளங்களை முடக்குவது தொடர்பில் உரிய விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான நடவடிக்கைகள் மக்களின் தகவல் அறிந்து கொள்ளும் சுதந்திரத்தை முடக்குவதாக நோக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment