Tuesday, November 8, 2011

இலங்கையின் இரகசியச் சிறைச்சாலைகளில் தமிழ்க் கைதிகள் இன்னும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுகின்றனர்(புலிகளின்)சனல் 4 வீடியோ செய்தி வெளியிட்டுள்ளது!

Tuesday, November 08, 2011
இலங்கையில் உள்ள இரகசியச் சிறைச்சாலைகளில் தமிழ்க் கைதிகள் இன்னும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவதாக (புலிகளின்) சனல் 4 தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

அன்மையில் இலங்கைச் சிறைச்சாலையில் இருந்து தப்பித்த நிலையில் பிரித்தானியாவில் அகதிகள் அந்தஸ்து கோரிய இருவரது வீடியோக் காட்சிகளை சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

இதுவரை பிரித்தானியாவில் உள்ள சுமார் 35 (புலிகளின்) தமிழ் இளைஞர்களை சனல் 4 தொலைக்காட்சி தொடர்புகொண்டு அவர்களிடம் இருந்து வாக்குமூலங்களைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்களில் பலர் ஒரே வகையான சித்திரவதை தமக்கு இழைக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர். சித்திரவதைக்கு எதிரான மனித உரிமை அமைப்புகள் சில ஐ.நா விடம் இது குறித்து முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டுள்ளதாகவும் மேலும் அறியப்படுகிறது.

No comments:

Post a Comment