Sunday, November 06, 2011
ராமேசுவரம்:ராமேசுவரம் அருகே இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு மீனவர்களை விரட்டினர். இரும்பு கம்பியால் தாக்கியதில் 2 மீனவர்கள் காயமடைந்தனர்.
ராமேசுவரம் மீனவர்கள் நேற்று 500 படகுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். நேற்று நள்ளிரவு 1 மணிக்கு மீனவர்கள் கச்சத்தீவு அருகே நடுக்கடலில் வலைகளை விரித்து மீன்களுக்காக காத்து கொண்டிருந்தனர்.
அப்போது சிங்கள கடற்படையினர் 5 குட்டி ரோந்து கப்பல்களில் 20-க்கும் மேற்பட்ட வீரர்கள் சீறிபாய்ந்தபடி வந்தனர். அவர்கள் ராமேசுவரம் மீனவர்களை பார்த்து உடனடியாக இங்கு இருந்து செல்லுங்கள். இங்கு மீன்பிடிக்க கூடாது என்று ஒலிபெருக்கி மூலம் எச்சரித்தனர்.
இதனால் அவசர அவசரமாக ராமேசுவரம் மீனவர்கள் உயிர் பிழைத்தால் போதும் என்று வலைகளை எடுத்து கொண்டு புறப்பட தயாரானார்கள். அப்போது இலங்கை கடற்படை வீரர்கள் திடீரென வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு வேகமாக புறப்படுங்கள் என்று கூறி எச்சரித்தனர். மேலும் இரும்பு கம்பிகளால் மீனவர்களை தாக்கினர்.
மேலும் துப்பாக்கியால் சுட்டதில் ராஜசேகர் என்பவருக்கு சொந்தமான படகில் குண்டு பாய்ந்தது. இரும்பு கம்பியால் தாக்கியதில் படகில் இருந்த மீனவர்கள் மகேந்திரன், சகாயம் ஆகிய 2 பேர் காயமடைந்தனர்.
இதையடுத்து மற்ற மீனவர்கள் காயமடைந்த மீனவர்களை மீட்டு வேகமாக கரைக்கு திரும்பினர். பின்னர் காயமடைந்த 2 மீனவர்களும் ராமேசுவரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
மகேந்திரனுக்கு முதுகு பக்கம் 3 தையல்கள் போடப்பட்டன. சகாயத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பின் அவர் வீடு திரும்பினார்.
இச்சம்பவம் குறித்து ராமேசுவரம் மீனவர்கள் மீன்துறை உதவி இயக்குனரிடம் புகார் செய்தனர். இந்த சம்பவத்தால் ராமேசுவரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments:
Post a Comment