Sunday, November 6, 2011

அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளுக்கு விஜயத்தினை மேற்கொண்டிருந்த(புலி) கூட்டமைப் பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் லண்டனுக்கு விஜயம்!

Sunday, November 06, 2011
அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டிருந்த தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப் பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று லண்டனுக்கு விஜ யமொன்றை மேற்கொண்டுள்ளனர்.

நேற்றுக் காலை 10:40 மணிக்கு லண்டன் ஹீத்றூ விமான நிலையத்தை வந்தடைந்த கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை, தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் மலர்மாலை அணிவித்து வரவேற்றனர். மூன்று நாட்கள் லண்டனில் தங்கியிருக்கவுள்ள இவர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை மற்றும் நாளை திங்கட்கிழமை பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அரசியல் பிரமுகர்கள் பலரை சந்திக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment