Sunday, November 06, 2011சர்வதேச சமூகத்திற்கும் நாட்டு மக்களுக்கும் எதிர்க்கட்சிகள் பொய்யான தகவல்களை வழங்கி
வருகின்றது-பசில் ராஜபக்ச!
எதிர்க்கட்சிகள் நாட்டு மக்களுக்கும், சர்வதேச சமூகத்திற்கும் பொய்யான தகவல்களை வழங்கி வருவதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.நட்டமடையும் நிறுவனங்களை தேசிய மயப்படுத்தல் குறித்து எதிர்க்கட்சிகள் மக்கள் மத்தியில் பிழையான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விடயம் குறித்து உலக வங்கி பிரதிநிதிகளுக்கு அண்மையில் விளக்கமளிக்கப்பட்டது.
ஆடைக் கைத்தொழிற்சாலைகளுக்கு பாரியளவில் அரசாங்கம் சலுகைகளை வழங்கிய போதிலும் அவை உரிய ஒப்பந்தத்தின் அடிப்படையில் செயற்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டுக்கு பாதிப்பு ஏற்படக் கூடிய வர்த்தக நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவே புதிய சட்டம் அமுல்படுத்தப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment