Saturday, November 19, 2011புலிகளின் மாவீரர் தின அச்சமில்லை:ஒரு காலகட்டத்தில், நொவம்பர் மாதம் 26ம் திகதி மிகவும் அச்சுறுத்தலாக காணப்பட்டது-அரசாங்கம்!
நாட்டு மக்கள் அனைவரும் இருதய சுத்தியுடன் யோசிக்க வேண்டிய விடயம் ஒன்ற இருப்பதாக அமைச்சர் டளஸ் அழகப் பெரும தெரிவித்துள்ளார்.
காலி – பலபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு காலகட்டத்தில், நொவம்பர் மாதம் 26ம் திகதி மிகவும் அச்சுறுத்தலாக காணப்பட்டது.
புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரின் பிறந்த தினதில், மாவீரர் தினமாக கொண்டு, கொழும்பிலும், நாட்டிலும் பல்வேறு வன்முறைகள் இடம்பெற்றதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த தினத்தை கருத்தில் கொண்டே நாட்டு மக்கள் தமது பணிகளை மேற்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் தற்போது அனைவரும் இருதய சுத்தியுடன் சிந்திக்க வேண்டிய விடயம் ஒன்று இருப்பதாகவும்,
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவ்வாறான ஒரு காலகட்டத்தை மாற்றி, தற்போது சுதந்திரமான சூழ்நிலையை உருவாக்கி இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்
No comments:
Post a Comment