Saturday, November 19, 2011

இலங்கை கடற்படைக்கு இந்தியா கப்பல்களை வழங்குகிறது!

Saturday, November 19, 2011
இலங்கை கடற்படையினரின் அபிவிருத்திக்காக இந்தியா இரண்டு கப்பல்களை வழங்கவுள்ளது.

த ஹிந்து பத்திரிகை இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

கடற்கொள்ளைகள் மற்றும் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்காக இந்த கப்பல்கள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில் இந்து சமுத்திரத்தில் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வதால், இலங்கை இந்து பிராந்தியத்துக்கு மாத்திரம் இன்றி, முழு உலகத்துக்கும் பலன் கிடைப்பதாக பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்து சமுத்திரத்தின் பாதுகாப்புக்கு, இலங்கை கடற்படை பாரிய பங்களிப்பை வழங்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment