Monday, November 07, 2011
கேன்ஸ் : பிரான்சின் கேன்ஸ் நகரில் நடைபெற்ற ஜி20 நாடுகள் அமைப்பின் 2 நாள் உச்சி மாநாடு தோல்வியில் முடிந்ததாக நிபுணர்கள் கூறியுள்ளனர். இந்த மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங், அமெரிக்க அதிபர் ஒபாமா, இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், சீன அதிபர் ஹூ ஜிண்டாவோ, பிரான்ஸ் அதிபர் சர்கோசி, ஜெர்மனி பிரதமர் மெர்க்கல் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
உலக நாடுகள் எதிர்காலத்தில் நிதி நெருக்கடியில் சிக்காத வகையில் நிதித் துறையில் சீர்திருத்தங்கள் செய்வது மற்றும் வெளிநாட்டு முதலீட்டை அனைத்து நாடுகளுக்கும் பரவலாக்குவது தொடர்பாக விவாதிப்பதற்காக இந்த மாநாடு கூடியது. ஆனால், ஐரோப்பிய யூனியனில் ஏற்பட்டுள்ள கடும் நிதி நெருக்கடி புயலைக் கிளப்பியதால் ஆக்கப்பூர்வமான எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை. எனினும், ஐரோப்பிய யூனியனில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியைத் தீர்ப்பதற்கான திட்டம் மாநாட்டில் வகுக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோசி தெரிவித்துள்ளார்.
நெருக்கடியை தீர்ப்பது தொடர்பாக தேவையான உதவியை ஐஎம்எப் மூலம் வழங்க தயார் என பிரேசில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா ஆகிய வளரும் நாடுகளின் (பிரிக்ஸ்) தலைவர்கள் தெரிவித்துள்ளனர். ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்கும் கிரீஸ் நாட்டில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை தீர்ப்பதற்கு ஐரோப்பிய யூனியன் ஸி8.7 லட்சம் கோடி நிதியுதவி வழங்க முன்வந்துள்ள போதிலும், அதை ஏற்பது குறித்து வாக்கெடுப்பு நடத்தப்படும் என கிரீஸ் அறிவித்தது.
இது ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளை அதிர்ச்சியடைய வைத்தது. அவ்வாறு வாக்கெடுப்பு நடத்தினால் கிரீஸ் நாட்டை யூனியனிலிருந்து வெளியேற்றுவோம் என எச்சரித்தனர். ஜி20 மாநாட்டிலும் இது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. ஐரோப்பிய நாடுகளின் நிதி நெருக்கடிக்கு உடனடி தீர்வு காண யூனியன் வழங்கும் நிதியுதவியை கிரீஸ் வாக்கெடுப்பின்றி ஏற்றுக் கொள்ள வேண்டும் என ஜி20 உறுப்பு நாடுகள் வலியுறுத்தின. இதையடுத்து, வாக்கெடுப்பை கைவிட முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. எனினும், கிரீஸ் தரப்பில் தெளிவான முடிவு எதுவும் வெளியிடப்படவில்லை.

No comments:
Post a Comment