Monday, November 07, 2011
சீன மீன்பிடி இழுவை கப்பலொன்று தமது கடல்பிராந்தியத்தினுள் நுழைந்ததன் காரணமாக, அதன் தலைவரை கைது செய்துள்ளதாக ஜப்பானிய கரையோர காவல்படையினர் தெரிவித்துள்ளனர்.
தமது கட்டளைக்கு கீழ்படிய மறுத்த சீன கப்பலை; சுமார் ஐந்து மணி நேரம் துரத்தியதன் பின்னனரே கைப்பற்றியதாக ஜப்பானிய கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் ஜப்பானிய கோட்டா தீவுகளுக்கு அப்பால் உள்ள கடற்பிராந்தியத்தில் இடம்பெற்றுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட கப்பல் தலைவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் பட்சத்தில், ஜப்பானிய நீதிமன்றம் குறைந்தது 6 மாத கால சிறைத்தண்டனை வழங்க வாய்ப்பு உள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, கடந்த வருடத்திலும் ஜப்பானிய கடற்படையினர் சீன கப்பல் தலைவரை, இதேபோன்று கைது செய்திருந்தனர்.
இதன் காரணமாக, சீனா மற்றும் ஜப்பானிற்கு இடையே பாரிய ராஜதந்திர கருத்து மோதல் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment