Friday, November 11, 2011

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசுக்குமிடையிலான அடுத்த கட்ட பேச்சுவார்த்தை எதிர்வரும் 16 ஆம் திகதி?

Friday, November 11, 2011
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசுக்குமிடையிலான அடுத்த கட்ட பேச்சுவார்த்தை எதிர்வரும் 16 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெறவுள்ளதாக தமிழத் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ சுந்திரன் தெரிவித்துள்ளார்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் அரச தரப்பிடம் கடந்த சந்திப்புக்களின் போது முன்வைக்கப்பட்டிருந்த கோரிக்கைகளுக்கு இணக்கம் காண்பது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக சுமந்திரன் அத தெரண இணையத்துக்குத் தெரிவித்தார் .இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் அடுத்தச் சுற்றுப் பேச்சுவார்த்தையை நடத்தத் தீர்மானித்துள்ளது. இதன்படி அரசு - கூட்டமைப்புக்கு இடையிலான அடுத்துச் சுற்றுப் பேச்சுவார்த்தை எதிர்வரும் 16ம் திகதி கொழும்பில் இடம்பெறவுள்ளது.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் அரச தரப்பிடம் கடந்த சந்திப்புக்களின் போது சமர்பிக்கப்பட்டுள்ள கோரிக்கைகளுக்கு இணக்கம் காண்பது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது

அடுத்தச் சுற்றுப் பேச்சுவார்த்தையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தி அதன் தலைவர் இரா.சம்பந்தன், பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா, சுரேஷ் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய பிரமுகர்கள் அமெரிக்கா, கனடா, லண்டன் உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று இலங்கையின் இனப்பிரச்சினை, சிக்கல்கள் குறித்து கலந்துரையாடிவிட்டு வந்துள்ள நிலையில் அரச தரப்புடனான அடுத்தச் சுற்றுப் பேச்சுவார்த்தை முக்கியம்வாய்ந்ததாக அமையுமென கருதப்படுகிறது.

No comments:

Post a Comment