Sunday, November 20, 2011

பாகிஸ்தானில் 150 எம்.பி.க்களுக்கு மிரட்டல் எஸ்.எம்.எஸ்!

Sunday, November 20, 2011
இஸ்லாமாபாத், : பாகிஸ்தானில் 150 எம்.பி, எம்.எல்.ஏ.க்களுக்கு செல்போனில் கொலை மிரட்டல் எஸ்.எம்.எஸ் வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் உறுப்பினர்கள் மற்றும் மாகான சட்டசபை உறுப்பினர்கள் 150 பேருக்கு இரண்டு நாள் முன்பு செல்போனில் ஒரு எஸ்.எம்.எஸ் வந்துள்ளது.

அதில், அவர்கள் பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்றும், இல்லாவிட்டால் கொல்லப்படுவார்கள் என்றும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது பற்றி உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் ரெஹ்மான் மாலிக் கூறியதாவது:

எஸ்.எம்.எஸ் அனுப்பிய விஷமிகள் யார் என தெரியவில்லை. அவர்களுக்கு எப்படி வி.ஐ.பி.க்களின் செல்போன் நம்பர் கிடைத்தது என ஆச்சரியமாக உள்ளது. மர்ம நபர்கள் பற்றி விசாரிக்க சைபர் கிரைம் பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளேன். இது தொடர்பாக 2 பேரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். மிரட்டலுக்கான காரணம் போலீசாரின் விசாரணையில்தான் தெரிய வரும். மிரட்டல் ஆசாமிகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு மாலிக் தெரிவித்தார்.

ஆபாச வார்த்தைகளுக்கு அரசு தடை
பாகிஸ்தானின் தொலைதொடர்பு துறை, செல்போன் கம்பெனிகளுக்கு ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில் ஆங்கிலம் மற்றும் உருது மொழியில் உள்ள ஆபாச வார்த்தைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், எஸ்.எம்.எஸ்.சில் அந்த வார்த்தைகளை கம்பெனிகள் தடுக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment