Monday, November 14, 2011
கொழும்பு: யாழ். நகரப்பகுதியில் நடத்திச் செல்லப்பட்டு வந்த விபச்சார விடுதி ஒன்றை முற்றுகையிட்ட பொலிஸார் அங்கிருந்த எட்டு ஆண்களையும், ஜந்து பெண்களையும் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்துள்ளனர்.
யாழ். நகரப்பகுதியில் உள்ள சுமங்கலி என்ற தனியர் விடுதியில் நீண்ட நாட்களாக விபச்சார நடவடிக்கை நடைபெற்று வந்துள்ளது.
யாழ்.பொலிஸாரின் வேட்டையில் இந்த விபச்சார விடுதி முற்றுகையிடப்பட்டு உரிமையாளர் உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விடுதி தமிழ் அரசியல் கட்சி ஒன்றின் முக்கியஸ்தர் ஒருவரினால் நடத்தப்பட்டு வந்துள்ளதாக யாழ்.பொலிஸ் நிலையத் தலைமைப் பொலிஸ் அதிகாரி சமன் சிகேர தெரிவித்துள்ளார்.
விபச்சாரத்தில் ஈடுபட்டவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டவர்கள் இன்று திங்கட்கிழமை யாழ்.நீதிமன்றில் ஆஜர் படுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment