Monday, November 14, 2011

கப்பம் பெற முயன்ற இராணுவ வீர்ர் கைது:-யாழ். பாடசாலை மாணவர்களுக்கு ஹெரோயின் விற்பனை செய்த பிரதான முகவர் கைது!

Monday, November 14, 2011
கொழும்பு: மாத்தளை இரத்தோட்டை பகுதி வர்த்தகர் ஒருவரிடம் பத்து இலட்ச ரூபாவை கப்பமாக பெறுவதற்கு முற்பட்ட இராணுவ வீரர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் முகமூடியுடன் வந்து வர்த்தகர் ஒருவரிடம் நேற்றிரவு கப்பம் பெறுவதற்கு முற்பட்டபோது பொலிஸ் குழுவொன்றினால் இவர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

மாத்தளை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திலக் அபேசிறிவர்தனவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேகநபரான இராணுவ வீரர் கைதசெய்யப்பட்டுள்ளார்.

நாயாரு பிரதேச இராணுவ முகாம் ஒன்றில் இந்த இராணுவ வீர்ர் சேவையாற்றியதாக பொலிஸார் மேலும் கூறினார்.

யாழ். பாடசாலை மாணவர்களுக்கு ஹெரோயின் விற்பனை செய்த பிரதான முகவர் கைது!

யாழ். பாடசாலை மாணவர்களுக்கு ஹெரோயின் போதைப் பொருள் விற்பனை செய்த குற்றச்சாட்டில் பிரதான முகவர் ஒருவரை நேற்று முன்தினம் யாழ். நகர் கொட்டடி பகுதியில் வைத்து யாழ். காவற்துறையினர் கைது செய்ததாக யாழ் காவல் நிலையப்பொறுப்பதிகாரி சமன்சிக்கேரா தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டவரிடம் தொடர் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் திங்கட்கிழமை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

யாழ். பாடசாலை மாணவர்கள் ஹெரோயின் போதைப் பொருட்களைப் பயன்படுத்துவது குறித்த தகவலின் அடிப்படையில் யாழ். நகரில் உள்ள வீடொன்றில் வைத்து 8 மாணவர்களை யாழ். காவற்துறையினர் கைது செய்தனர். அதன் பின்னர் மேலும் இரு மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இம் மாணவர்கள் 10 பேரும் ஆரம்ப விசாரணைகளின் பின் யாழ். மாவட்ட நீதிபதி முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டனர். இதன் போது ஐந்து மாணவர்கள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன் ஏனைய 5 மாணவர்களும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் விசாரணைகளின் அடிப்படையில் பாடசாலை மாணவர்களுக்கு ஹெரோயின் போதைப் பொருட்களை விநியோகித்த பிரதான முகவரை கொட்டடியில் வைத்து காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.

No comments:

Post a Comment