Monday, November 14, 2011

முன்னாள் முப்படைகளின் பிரதானி சரத் பொன்சேகா வெள்ளைகொடி வழக்கு நிறைவு பெறாததால் பிரிதொரு வழக்கு இன்று ஒத்திவைப்பு!

Monday, November 14, 2011
கொழும்பு: கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது இராணுவ விட்டோடிகளை மீண்டும் சேவையில் இணைத்துக் கொண்டமை தொடர்பில் முன்னாள் முப்படைகளின் பிரதானி சரத் பொன்சேகா மற்றும் அவருடைய செயலாளர் சேனக டி சில்வா ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் விசாரணை இன்று 14ம் திகதி திங்கட்கிழமை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது சரத் பொன்சேகா மற்றும் சேனக டி சில்வா ஆகியோர் நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர்.

வெள்ளைக் கொடி வழக்கு இன்னும் நிறைவு பெறாததால் இவ்வழக்கை பிற்போடுமாறு சரத் பொன்சேகாவின் சட்டத்தரணி இன்று நீதிமன்றில் கேட்டுக் கெண்டுள்ளார்.

எனினும் இதற்கு அரச தரப்பு சட்டத்தரணி எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

இருந்த போதும் வழக்கை எதிர்வரும் 23ம் திகதிவரை ஒத்திவைப்பதாக கொழும்பு மேல் நீதிமன்றி நீதிபதி தீபாலி விஜேசுந்தர உத்தரவிட்டார்.

மேலும் அன்றைய தினம் சாட்சியாளர்களை நீதிமன்றில் ஆஜராகுமாறும் அவர் பணித்துள்ளார்.

No comments:

Post a Comment