Friday, November 25, 2011

12 அமெரிக்க உளவாளிகள் ஈரானில் அதிரடி கைது : எம்.பி. பகிரங்க தகவல்!

Friday, November 25, 2011
டெஹ்ரான் : ஈரானில் அமெரிக்காவின் உளவாளிகள் 12 பேர் கைது செய்யப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் பர்வேஸ் சரோவ்ரி தெரிவித்தார். அணு ஆயுதங்கள் தயாரிப்பில் ஈரான் ரகசியமாக ஈடுபட்டு வருகிறது. அணு உலை நிறுவும் முயற்சிகளை நிறுத்த வேண்டும் என்று ஐ.நா, அமெரிக்கா, இங்கிலாந்து உள்பட சர்வதேச நாடுகள் வலியுறுத்தி வருகின்றனர். Ôஈரானில் ஆய்வு செய்ய அனுமதிக்க வேண்டும்Õ என்று சர்வதேச அணுசக்தி கழகமும் கூறிவருகிறது. ஆனால், ஈரான் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. இதையடுத்து பொருளாதார தடைகளை பல நாடுகள் விதித்துள்ளன.பரபரப்பான சூழ்நிலையில், ஈரான் பாதுகாப்பு மற்றும் வெளியுறவு கொள்கைகளை முடிவு செய்யும் கமிட்டி நேற்று அவசர ஆலோசனை நடத்தியது. இதில் செல்வாக்கு மிக்க நாடாளுமன்ற உறுப்பினர் பர்வேஸ் சரோவ்ரி பங்கேற்றார். அதன்பின் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ÔÔஅமெரிக்காவை சேர்ந்த சிஐஏ உளவாளிகள் ஈரானுக்கு எதிராக உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் செயல்பட்டு கொண்டிருக்கின்றனர். இதுவரை 12 சிஐஏ ஏஜென்டுகள் கைது செய்யப்பட்டுள்ளனர்ÕÕ என்றார். ஆனால் அவர்கள் எங்கு கைது செய்யப்பட்டனர். அவர்கள் இப்போது எங்கிருக்கின்றனர் என்ற விவரங்களை அவர் வெளியிடவில்லை.

No comments:

Post a Comment