Friday, November 25, 2011பல்கலைக்கழகங்களில் பொலிஸ் நிலையங்களை அமைப்பதா? இல்லையா? என்பதை மாணவர்களே தீர்மானிக்க வேண்டும் என உயர்கல்வி அமைச்சின் செயலாளர் டாக்டர் சுனில் நவரத்ன தெரிவித்தார்.
ஒரு சிறு மாணவர் குழுவினரால் பல்கலைக்கழகங்களில் குழப்பங்கள் தோற்றுவிக்கப்படுகின்றன. இதனால் ஏனைய மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்படுகின்றன. இதற்கு இடமளிக்க முடியாது. எனவே, பல்கலைக்கழகங்களில் குழப்பங்களை ஏற்படுத்துவதைத் தவிர்த்துக்கொள்வதா? அல்லது சுமுகமான சூழ்நிலையை ஏற்படுத்துவதா? என்ற தீர்மானத்திலேயே பொலிஸ் காவலரண்கள் அமைப்பது தொடர்பிலான கேள்விக்குத் தீர்வு காண முடியும்.
நாட்டில் நடைமுறையில் உள்ள சட்டம், ஒழுங்கு பல்கலைக்கழகங்களிலும் கடைபிடிக்கப்பட வேண்டும். அதனை மீற முடியாது. பல்கலைக்கழகம் தனியொரு உலகமல்ல. அதுவும் நாட்டுடன் தொடர்புபட்டது என்றும் அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment