Wednesday, October 05, 2011ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழ் மக்கள் பிரச்சினைக்கு நியாயமான அரசியல் தீர்வை முன்வைப்பதன் மூலமே பேரினவாத கடும் போக்காளர்களை கட்டுப்படுத்த முடியும் என்று புளொட் இயக்கத் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.
தமிழர் பிரச்சினை தீர்வு தொடர்பாக அரசாங்கம் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடனேயே பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டுமென்றும் அவர் கூறினார்.
இது தொடர்பாக புளொட் இயக்கத் தலை வர் தர்மலிங்கம் சித்தார்த்தன் மேலும் கருத்து தெரிவிக்கையில், தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண் பதற்காக ஜனாதிபதி தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினருடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றார்.இவ்வாறானதோர் தருணத்தில் அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியின் மூலம் அமைச்சராக பதவி வகிப்பவரின் கீழ் இயங்கும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் கூட்டமைப்பை தடை செய்ய வேண்டுமென்று தெரிவித்துள்ளது.
இன்னொரு அமைச்சர் பயங்கரவாதத்திற்கு துணை போனவர்களுக்கு எதிராக போர்க் குற்ற விசாரணை வேண்டுமென தெரிவித்துள்ளார்.இவ்வாறான கருத்துக்கள் சுமூகமான தீர்வை காண்பதற்கு முட்டுக்கட்டையாக அமையும். பெரும்பான்மையான சிங்கள மக்கள் மத்தியில் இனவாதம் கிடையாது. இவ்வாறான கருத்துக்களால் இனவாதம் ஊக்குவிக்கப்படும்.
பழைய பிரச்சினைகளை மீண்டும், மீண்டும் கிளறிக் கொண்டிருப்பதால் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கப் போவதில்லை. இவ்வாறான நடவடிக்கைகள் இரு தரப்பு கடும் போக்காளர்களுக்கு சாதகமாக அமையும்.
யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். இது தான் யதார்த்தம்.
அத்தோடு இவ்வாறான கருத்துக்கள் தமிழ் மக்கள் மத்தியிலும் சர்வதேசத்திலும் நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தும். எனவே ஜனாதிபதி தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை முன்வைக்க வேண்டும். இதன் மூலமே கடும் போக்காளர்களை கட்டுப்படுத்த முடியும். தமிழ் மக்களுக்கு தீர்வை வழங்க முடியும் என்றும் கூறினார்.
No comments:
Post a Comment