Wednesday, October 05, 2011அரசாங்க பல் வைத்தியர்கள் சங்கம் மற்றும் விசேட வைத்திய நிபுணர்கள் சங்கத்தினரால் நாடளாவிய ரீதியில் இன்று முன்னெடுக்கப்படும் பணிப்பகிஷ்கரிப்புக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.
இன்று காலை கூடிய நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தின் போது இதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அந்த சங்கத்தின் உப செயலாளர் டொக்டர் உபுல் குணசேகர தெரிவித்தார்.
இலங்கை வைத்தியசபையின் பதிவாளர் மீது நேற்று மாலை மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுகின்றது.
தமது சங்கத்தின் வைத்தியர்கள் இன்றைய தினம் சிகிச்சை நடவடிக்கைளில் இருந்து விலகிக் கொண்டுள்ளதாக அரச பல் வைத்தியர்கள் சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஆனந்த ரத்னாயக்க தெரிவித்தார்.
இதேவேளை இன்றையதினம் அரச வைத்தியசாலைகளின் விசேட வைத்திய சிகிச்சை நடவடிக்கைகளில் இருந்து விலகியிருப்பதாக விசேட வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் டொக்டர் ஆனந்த சமரசேகர குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment