Wednesday, October 05, 2011தேசிய வைத்திய சபையின் பதிவாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட இவர், பாணந்துறை – களுதேவல பிரதேசத்தை சேர்ந்தவர் என மொரட்டுவ காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் இன்றைய தினம் மொரட்டுவ நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வைத்திய சபையின் பதிவாளர் மீது மோட்டார் சைக்களில் வந்த இரண்டு பேர் தாக்குதல் நடத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர்...
இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அரச பல் வைத்தியர்கள் சங்கத்தினர் சேவைப்புறக்கணிப்பு ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.
இதேவேளை வைத்திய சபையின் பதிவாளர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, சிரேஷ்ட பிரதி காவற்துறை மா அதிபர் காமினி நவரத்ன மற்றும் கொழும்பு மாவட்டத்திற்கான பிரதி காவற்துறை மா அதிபர் அநுர சேனாநாயக்க ஆகியோருக்கிடையே கலந்துரையாடல் ஒன்று இடம் பெற்றது...
இதனிடையே இந்த அடையாள சேவைப்புறக்கணிப்பு போராட்டத்தில் இன்று முற்பகல் முதல் தாமும் இணைந்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாடாளாவிய ரீதியாக உள்ள வைத்தியசாலைகளில் இன்று நண்பகல் 12 மணி வரை இந்த சேவைப்புறக்கணிப்பு போராட்டம் முன் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த சேவைப்புறக்கணிப்பு போராட்டத்தை தொடர்ந்தும் முன் எடுப்பதாக இல்லையா என்பது தொடர்பாக தெளிவுப்படுத்தும் செய்தியாளர் சந்திப்பொன்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment