Friday, October 28, 2011

கடந்த தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த (புலி) கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு இலங்கைக்கெதிரான போர் குற்றங்களை விலகிக் கொள்ள வேண்டாம் - ஹிலரி கிளின்டனிடம் ரகசிய மகஜரை அனுப்பி வைத்துள்ளது!

Friday, October 28, 2011
இலங்கைக்கு எதிரான போர் குற்றங்களை விலகிக் கொள்ள வேண்டாம் எனக் கோரி, வடக்கு கிழக்கு சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் என்ற பெயரில், அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஹிலரி கிளின்டனிடம் ரகசிய மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்திற்கு தெரியவந்துள்ளதென திவயின தெரிவித்துள்ளது.

தமிழ் தேசியக் (புலி)கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஹிலரி கிளின்டனுக்கும் இடையில் நேற்று பேச்சுவார்த்தை ஆரம்பிக்கும் முன்னர், இந்த மகஜர் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு இந்த மகஜரை அனுப்பி வைத்துள்ளதாக புலனாய்வு பிரிவினர் கண்டறிந்துள்ளனர்.

தமிழ் தேசியக் (புலி)கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நடத்தப்படும் பேச்சுவார்த்தையில் 13 வது அரசியலமைப்பு திருத்தம் குறித்து கவனம் செலுத்துவதில் பயனில்லை எனவும் தமிழ் மக்களுக்கு சுயாட்சியே தேவை எனவும் அந்த மகஜரில் கூறப்பட்டுள்ளது.

அதேவேளை அமெரிக்கா சென்றுள்ள தமிழ் தேசியக் (புலி)கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விஸ்வநாதன் ருத்ரகுமாரன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment