Friday, October 28, 2011
ஐக்கிய நாடுகள் அமைப்பினரை சந்திக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மாத்திரம் சந்தர்ப்பம் வழங்கப்படுமானால், அதற்கு ஈடான வாய்ப்பு ஏனைய தமிழ் கட்சிகளுக்கும் வழங்கப்பட வேண்டும் என பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க ஐக்கிய நாடுகள் பிரதிப பொதுச் செயலாளரிடம் கடந்த 26 ஆம் திகதி கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையில் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே கட்சி தமிழ் தேசியக் கூட்டமைப்பு அல்ல எனவும் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பல தமிழ், முஸ்லீம் கட்சிகள் இருப்பதாகவும் இந்த கட்சிகள் இலங்கை தமிழ் மக்களுக்காக பாரிய சேவைகளை செய்துள்ளதாகவும் சமரசிங்க கூறியுள்ளார்.
அதேவேளை இலங்கையில் மனித உரிமைகளின் முன்னேற்றம் குறித்தும் மனித உரிமை செயற்பாடுகள் உள்ளிட்ட விடயங்கள் சம்பந்தமாக ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான்-கீ-மூனுடன் ஜெனிவாவில் 26 ஆம் திகதி நடைபெற்ற சந்திப்பின் போது விளக்கமளித்துள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
இலங்கையில் தற்போதைய மனித உரிமை தொடர்பான விடயங்களின் முன்னேற்றம், வடக்கு கிழக்கில் உள்ள மக்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுதல், விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுக்கான புனர்வாழ்வு நடவடிக்கைகள், யுத்தம் நடைபெற்ற பிரதேசங்களில் தேர்தலை நடத்தி ஜனநாயகத்தை உறுதிப்படுத்தியமை உட்பட பல விடயங்கள் குறித்து பான்-கீ-மூனிடம் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரில் ஏற்பட்ட பிரச்சினைகள், கேள்விகள் தொடுக்கப்பட்டமை உள்ளிட்ட விடயங்களும், ஐக்கிய நாடுகள் நிபுணர்கள் குழு அறிக்கையில் அடங்கியுள்ள விடயங்கள் சம்பந்தமாகவும் பான்-கீ-மூனிடம் கலந்துரையாடியதாகவும் மகிந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment